தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கமால்சாகிபு தெருவில் குடியிருந்து வருபவர் அப்பாஸ் (வயது.80) மாற்றுதிறனாளி இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை, இவருக்கு யாருடைய ஆதரவும் இல்லை, சொந்தமாக வீடும் இல்லாததால் சாலையோரம் தங்கி உள்ளார்.
கடந்த 6 மாதத்திற்க்கு முன் இவருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவி நிறுத்தப்பட்டது. இதனால் மருத்துவம் மற்றும் உணவிற்க்கு வழியின்றி கண்ணீர் வடித்து வருகிறார். தனக்கு நிறுத்தப்பட்ட முதியோர் உதவி தொகை வழங்கி வேண்டி தாசில்தார் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவருக்கு மனு கொடுத்தும் இதுவரை முதியோர் உதவி தொகை வழங்கப்படவில்லை.
முதியோர் உதவி தொகை எதிர்பார்த்து இவர் தினமும் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்திற்க்கு வந்து செல்வது பார்ப்பவர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக