எண்ணங்களில் சங்கமும், கனவு இந்தியா, மகாத்மா காந்தி மாலை நேர பயிற்சி மையம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் 92வது பிறந்தநாள் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 அக்டோபர், 2023

எண்ணங்களில் சங்கமும், கனவு இந்தியா, மகாத்மா காந்தி மாலை நேர பயிற்சி மையம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் 92வது பிறந்தநாள் விழா.


எண்ணங்களில் சங்கமும், கனவு இந்தியா, மகாத்மா காந்தி மாலை நேர பயிற்சி மையம்  மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து முன்னாள் ஜனாதிபதி  அப்துல் கலாம் அவர்களின் 92வது பிறந்தநாள் விழா மற்றும் மகாத்மா காந்தி மாலை நேர வகுப்பில் படிக்கும்  மாணவ மாணவிகளுக்கான தனித்திறமை  மேம்படுவதற்கான திறமை திருவிழா  பள்ளப்பட்டியில் உள்ள மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வளாகத்தில்  நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு  எண்ணங்களின் சங்கமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  மற்றும்  V4U தொண்டு நிறுவன இயக்குனர் திரு பிரகாஷ் அவர்கள் வரவேற்று பேசினார். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேஷ்வரன்  அவர்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் 92 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.


அப்போது அவர் பேசும்போது கலாம் அவர்களின் கனவை நிறைவேற்ற மலை கிராமத்தைச் சார்ந்த மாணவ மாணவிகள் நன்கு படித்து  உயர் பதவிகள் வருவதன் மூலம் கலாம் அவர்களின் கனவை நிறைவேற்ற இங்கே வந்திருக்கின்ற ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கி மாணவ மாணவிகளை ஊக்குவித்தார்.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த எண்ணங்களின் சங்கம் மாநில அமைப்பாளர் திரு ஜே. பிரபாகர் அவர்கள்  மாணவ மாணவிகள் வரைந்த  ஓவியங்களை பாராட்டி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில்  கனவு இந்திய அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் சதீஷ்குமார், வழக்கறிஞர் கபிலன், வழக்கறிஞர் பூபால், வழக்கறிஞர் சீனிவாசன்  எண்ணங்களின் சங்கமம்  அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் இளவரசன், சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன், CRDS தொண்டு நிறுவன இயக்குனர் சிவகுமார், க்ரிஸ்ட் இந்தியா தலைவர் பொம்மிடி முருகேசன், சசிகுமார், துரை, அன்பரசன், தகடூர் மன்ற பொறுப்பாளர் பிறைசூடன், ஃபிரண்ட்ஸ் ஆப் சொசைட்டி பொறுப்பாளர் சந்துரு, V4 U ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், இந்தியன் பில்லர்ஸ் ஒருங்கிணைப்பாளர் சோழ பாண்டியன், சமூக ஆர்வலர்கள் ராம், அதியமான் கோட்டை ராமன்   மருதம் நெல்லி சமூக வானொலியின் பொறுப்பாளர் கார்த்திக், மருதம் நெல்லி பாலிடெக்னிக் முதல்வர் மகேந்திரன், மரம் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து பேசினர். தர்மபுரி மாவட்ட. தெருக்கூத்து மற்றும்  நாடக கலை குழு  பொறுப்பாளர் சாரதி நன்றி கூறினார். 


விழாவுக்கான  ஏற்பாடுகளை சீறாண்டபுரம் கவியரசி, பால் சிலம்பு உமா, வழக்கறிஞர் பிக்கிலி முனிராஜ், மருதம் நெல்லி  கல்லூரியின் உதவி பேராசிரியர்  சிவசக்தி, நாட்றம்பாளையம் செந்தில், கேரட்டி மீனா, அத்திமரத்தூர் மகாலட்சுமி, பாலவாடி நவீன்  ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் 350 க்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பாராட்டு சான்றுகள் பெற்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad