பாலக்கோடு BDO ஆபிஸ் முன்பு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது, அவுசிங் போர்டு சுற்று சுவர் கட்டிடம் இடித்தவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய கோரி பி.டி.ஓ.ஆபிஸ் முன்பு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செயற்குழு உறுப்பிணர் சரவணன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் பாலக்கோடு அடுத்துள்ள அவுசிங் போர்டு குடியிப்பில் சுமார் 300க்கும் மேற்ப்பட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்புக்கு சொந்தமான இந்த குடியிருப்பு வளாகத்தில் குடியிருப்பு வாசிகளின் பாதுகாப்பு கருதி வீட்டு வசதி வாரியத்தின் மூலம் சுற்று சுவர் கட்டப்பட்டிருந்தது, இந்த சுற்று சுவரின் ஒரு பகுதியை பக்கத்து நிலத்தை சேர்ந்த ரவி என்பவர் அத்துமீறி அனுமதி இன்றி சட்டவிரோதமாக இடித்துள்ளார்.
இதற்கு உடந்தையாக உள்ள கரகதஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராஜீமுத்துவேல், ஓசுர் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர், பாலக்கோடு பி.டி.ஓ ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நல சங்க தலைவர் கணேசன்,புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் புகழேந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் சுந்தரம், சண்முகம், விஜயகுமார், மாதேஷ், காவேரி உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக