தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான புனித மண் கலசம் தேசத்திற்கு வழங்கும் விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் பொறுப்பு முனைவர் ரவி தலைமையில் இன்று நடைபெற்றது.
பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, முன்னாள் இராணுவ வீரர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிராம அளவில் வழங்கிய கலச மண் வட்டார அளவிலான புனித மண் கலசத்தில் கலக்கப்பட்டு தொடங்கி வைத்தார்.
உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, பேரணி நடைபெற்றது. 400க்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார்.
நிறைவாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ரமேஷ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக