தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேட்டில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரூர் நகர திமுக செயலாளரும் தனியார் மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்க தருமபுரி மாவட்ட கௌவுரவ தலைவருமான முல்லைரவி கலந்து கொண்டு தொ.மு.ச கொடியையேற்றி வைத்து உறுப்பினர் அட்டைகள் வழங்கினார்.
இதில் தொ.மு.ச மாநில துணை தலைவர் ஜே. பழனி கலந்துக் கொண்டு ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்தில் தொழிலாளார்களுக்கு திமுக அரசு வழங்கும் சலுகைகளையும் ஆட்டோ தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டி அவசியத்தையும் விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் தனியார் வாகன ஓட்டுனர் சங்க தருமபுரி மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன் டி.எல்.ஆனந்தன் ஆர்.முருகதாஸ், வி.ராகுலன், ஆட்டோ சங்க கிளைத்தலைவர் விமல்ராஜ், கலைவாணன், வேலு, ஆர்.அரவிந்தன், எஸ்.ஞானபிரகாசம், எம்.சேவிக், ஆர்.ஆனஸ்ட்ராஜ்,ஆர்.கே.ராஜா மற்றும் ஆனந்தன, சீனிவாசன், குமார், பாலு, சாந்தப்பன், ராஜாவேல், ராஜா குழந்தை, அருணாசலம், காளிமுத்து, சார்லஸ், மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர். முடிவில் சாந்தப்பன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக