இது தொடர்பாக சின்னக்கண்ணுவின் மகன் ராஜமாணிக்கம் பாப்பாரப்பட்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையில் இறங்கியது ... காவல்துறை குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க முதலில் உதவியது, அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி பதிவே, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரே மூதாட்டியிடம் கைவரிசை காட்டியது உறுதியானது, இதனை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தின் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அது பெங்களூர் முகவரியை காட்டவே, அதிலிருந்த செல்போன் எண் நடமாட்டத்தை கண்காணித்து, பெங்களூர் பன்னார்கட்டா பகுதியை சேர்ந்த முன்ஷீர் (40) என்பவனை காவல்துறையினர் கைது செய்து ஒன்பதரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்திருக்கிறது பாப்பாரப்பட்டி காவல்துறை.
மூதாட்டி சின்னக்கண்ணுவிடம் கைவரிசை காட்டிய அதே நாளில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முன்ஷீர் மாரண்டஅள்ளி அருகே கோவில்பட்டி என்ற இடத்தில் தனியாக வீட்டில் அமர்ந்திருந்த மூதாட்டி சரோஜா(88) என்பவரிடமும் இதே போல தந்திரமாக பேசி மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்து நாலரை பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு பெங்களூர் சென்றதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது, இந்த சம்பவத்தில் நாலரை பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டிருக்கிறது காவல்துறை இரண்டு சம்பவங்கிளிலும் மொத்தம சுமார் பதினான்கு பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்திருக்கிறது காவல்துறை தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறி வைத்து, தாயை போல இருக்கிறீர்கள் பசிக்கிறது எதாவது சாப்பிட கொடுங்கள் எனக்கூறி தான் வைத்திருக்கும் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை, மூட்டுவலி, உடல் வலிக்கு நல்லது தானும் இதை குடித்து வருகிறேன் எனக்கூறி மூதாட்டிகளுக்கு மயக்க மருந்து கலந்திருக்கும் குளிர் பானத்தை குடிக்க வைத்து, மூதாட்டிகள் மயங்கும் சமயத்தில் கைவரிசை காட்டிவிட்டு அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் சாதாரணமாக தப்பிசெல்வது கொள்ளயைன் முன்ஷீரின் ஸ்டைலாக இருந்திருக்கிறது கைதாகியுள்ள முன்ஷீர் மீது கர்நாடகாவி்ல் குற்ற வழக்குகள் உள்ளது என்கிறது காவல்துறை.
கர்நாடகாவிலிருந்து சுற்றுலா தலமான ஒகேனக்கல்லிற்கு இரு சக்கர வாகனத்தில் வந்த முன்ஷீர் அங்கே சுற்றுலா பயணிகளிடம் கைவரிசை காட்ட திட்டமிட்டு மூன்று நாட்கள் அங்கே தங்கியிருந்தும், எதுவும் கிடைக்காத நிலையில் மீண்டும் பெங்களூரு செல்ல தருமபுரி மாவட்டத்தின் கிராமத்து சாலைகளின் வழியே கடந்து செல்லும் போது, தனியே இருக்கும் மூதாட்டிகளை நோட்டமிட்டு, நிலம் சம்மந்தமான வேலையாக இங்கே வந்ததாகவும், கையில் பணமில்லை, தனது தாயை போலவே இருக்கிறீர்கள் பசிக்கிறது ஒரு வாய் சாப்பிட எதாவது கொடுக்க முடியுமா என அனுதாபத்தோடு தந்திரமாக பேசி மூதாட்டிகளுக்கு குளிர்பானத்தை குடிக்க கொடுத்தே கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது.
மூதாட்டி சின்னக்கண்ணுவிடமிருந்து தங்க நகைகளை மட்டுமே பறித்துச்சென்றதாகவும், வீட்டிலிருந்த பணத்தை எடுக்க வில்லை என கொள்ளயைன் முன்ஷீர் தெரிவித்திருப்பதால், ஐந்து லட்ச ரூபாய் பணத்தை எடுத்துச்சென்றது யார் என்பது குறித்து விசாரணையை தொடர்கின்றனர் பாப்பாரப்பட்டி காவல்துறையினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக