பாலக்கோடு தற்காலிக பேருந்து நிலையம் முன்பு சமூக நீதியை காப்போம் என்ற முழக்கத்துடன் கலைக்குழு நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 அக்டோபர், 2023

பாலக்கோடு தற்காலிக பேருந்து நிலையம் முன்பு சமூக நீதியை காப்போம் என்ற முழக்கத்துடன் கலைக்குழு நிகழ்ச்சி.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற  அமைப்பின் சார்பில் அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தின் கீழ் கடந்த 2ம் தேதி சென்னையில் தொடங்கிய கலைக்குழுவானது கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் வழியாக மதுரை சென்றடைந்து மதுரையில் வரும் 17ம் தேதி நடைபெறும் மக்கள் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனனயொட்டி இன்று காலை பாலக்கோடு தற்காலிக  பேருந்து நிலையத்திற்க்கு வந்த கலைக் குழுவினர் அரசியல் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற  அமைப்பின் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவு நிகழ்த்தினர்.


இந்நிகழ்ச்சியில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை  அமைப்பின் நிர்வாகி செந்தில்ராஜா மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad