விஜயதசமி நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசுப் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைப்பெற்றது அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் வந்து, மாணவர் சேர்க்கையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஆயுத பூஜையும், விஜய தசமியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை கொண்டாடப்படும் அடுத்த நாள் விஜய தசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினத்தன்று புதிய காரியங்களை தொடங்கினால் அமோகமாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கையாக கடைப்பிடிக்கப்படுகிறது.
குறிப்பாக, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை முதன்முதலாக விஜயதசமி நாளில் பள்ளிகளில் சேர்த்தால், அவர்கள் படிப்பில் மிகச்சிறந்தவர்களாக விளங்குவார்கள் என்று நம்புகின்றனர். இதனால், விஜய தசமியன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் விஜய தசமி தினத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளிலும் அண்மைக் காலமாக மாணவர் சேர்க்கையை அரசு நடத்தி வருகிறது.
இதன்படி, விஜய தசமியான இன்று அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் 1ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு உத்தரவு பிறப்பிட்டது. அதேபோல ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியராவது கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதுதொடர்பாக ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குநரகம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. கடத்தூர் கிரீன் பார்க் சிபிஎஸ்இ பள்ளியில் இப்பள்ளியின் நிறுவனர் எவரெஸ்ட் இரு.முனிரத்தினம் தலைமையில் மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் இபபள்ளியின் நிர்வாக அலுவலர் ராஜா, பள்ளியின் முதல்வர் ஜெகதீசன், இப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக