தமிழ்நாட்டில் மதமோதலை ஏற்படுத்த தூண்டும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நடைவிதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷணன் பேட்டி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 அக்டோபர், 2023

தமிழ்நாட்டில் மதமோதலை ஏற்படுத்த தூண்டும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நடைவிதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷணன் பேட்டி.


மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் அரூர் கட்சி அலுவலகத்தில் அளித்த பேட்டி, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையால் வாச்சாத்தி மக்கள் தாக்கப்பட்டனர். வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். கிராமமே சூறையாடப்பட்டது. இவர்களுக்கு நியாயம் கேட்டு 30 ஆண்டுகாலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மலைவாழ் மக்கள் சங்கமும் தொடர்ந்து மக்கள் போராட்டமும், சட்ட போராட்டம் நடத்தி, வாச்சாத்தி மக்களுக்கு வரலாற்று தீர்ப்பை பெற்றுத்தந்தது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு, போராடுகின்ற மக்களுக்கு தண்ணம்பிக்கையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்த வழக்கில் தண்டனை பெற்றோர், தண்டனைக்கு தடைவிதிக்க கோரி, உச்சநீதிமன்றம் மேல் முறையீட்டு செய்ததில், நீதிமன்றம்  குற்றவாளிகளுக்கு தண்டனையை தடைவிதிக்க முடியாது என கூறி  உச்ச நீதிமன்றம், தண்டனை  நிறைவேற்ற வேண்டும்,மேலும்  தண்டனை பெற்றோர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.


வாச்சாத்தி மக்களுக்கு தீர்ப்பு கிடைத்தும், மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை. அதிமுக அரசு குற்றவாளிகளை பாதுகாத்ததே தவிற, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதையும் செய்யவில்லை. 


கடந்த சில தினங்களுக்கு முன், தமிழக முதல்வரை சந்தித்து, வாச்சாத்தி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின் அம்சங்கள் நிறைவேற்றி தருமாறும், வாச்சாத்தி கிராம மக்களின் தேவையை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தினோம், தமிழக முதல்வரும் அக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கபடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாதயாத்திரை நடத்திவருகிறார்.இவர் மக்களுக்காக பாதயாத்திரை நடத்தவில்லை, மக்களிடையே மத மோதலை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார். சென்னிமலையில் பாதயாத்திரைக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்ற நோக்கில் கிறிஸ்துவ மக்களுக்கும் இந்துக்களுக்கும் மோத மோதல் ஏற்படுத்த இன்று பிஜேபி போராட்டம் நடத்தியுள்ளது. இதன் பின்னால் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. ஒரு கட்சி போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை ஆனால் மதமோதல் ஏற்படுத்த போராட்டம் நடத்துவதை அனுமதிக்க கூடாது. 


ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் பேரணி நடத்த தமிழக அரசிடம் அனுமதி கேட்டது. பரிசீலனையில் உள்ள போதே ஆர்எஸ்எஸ் நீதிமன்றத்தில் பேரணிக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடுத்தது நீதிமன்றம் இதற்க்கு அனுமதி அளித்துள்ளது வருத்தமளிக்கிறது. ஆர்எஸ்எஸ் பேரணியால்சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்டால் நீதிமன்றம் பொறுப்பு ஏற்க்குமா? எனவே இந்த தீர்ப்பின் மீது தமிழக அரசு மேல்முறையீடு செய்யது ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் கடந்த 10 தினங்களில் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டு 30 க்கும் மேற்பட்டார் இறந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 7 பேர் இறந்துள்ளனர்.


பட்டாசு தொழிற்சாலைகளில் லைசன்ஸ் உள்ளதா பாதுகாப்பு குறைபாடு உள்ளதா என கண்காணிப்பு அதிகாரிகள் கண்காணிக்காமல் என்ன செய்கின்றனர். முறையற்ற பாதுகாப்பற்ற பட்டாசு தொழிற்சாலைகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்புதால் விபத்து நடக்கிறது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே முறையாக  கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பட்டாசு ஆலை உயிரிழப்பு ஏற்படும் போது ஒன்றிய அரசு நிவாரணம் வழங்குவதில்லை எனவே உயிரிழந்தோரின் குடும்பத்தை பாதுகாக்க தலா ரூ 20 இலட்சம் வழங்கவேண்டும். பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகமே  இன்சூரன்ஸ்சுக்கான பிரியம் தொகையை செலுத்தவேண்டும். தமிழ்நாட்டில் சமீபத்தில் கொலை கொள்ளை குற்றத்தில் ஈடுபடுவோரை, காவல்துறையினரால் என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டு கொல்லப்படுகின்றனர்.


குற்றவாளிகளை பிடித்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர சுட்டுக்கொல்ல கூடாது அதே போன்று கைது செய்யப்பட்டோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது கை, உடைந்து வருகின்றனர். இதை கேட்டால் பாத்ரூமில் வழுக்கி விழுந்துதாக கூறுகின்றனர். எனவே குற்றவாளிகள் மீது  போலீஸ் தாக்குதலை கைவிடவேண்டும்.


கொலை கொள்ளை நடக்காமல் இருக்க புலனாய்வுத் துறையை வலுபடுத்தவேண்டும். காவல்துறை உயர் அதிகாரிகள் மெத்தன போக்கால் இது போன்ற செயல்பாடுகள் நடக்கின்றது என தெரிவித்தார்.


பேட்டியின் போது மத்தியகுழு உறுப்பினர் பெ.சன்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு ,மாவட்ட செயலாளர் ஏ.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad