இந்நிகழ்ச்சிக்கு ஏரியூர் ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் தம்பிதுரை முத்துசாமி, பெரும்பாலை இந்திரா நகர் அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் அசோக்குமார், செயலாளர் நாகப்பன், நேரு யுவ கேந்திரா அலுவலக பல்நோக்கு பணியாளர் முனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார்.
உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, பேரணி நடைபெற்றது. 500க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் யுவராஜ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக