மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.K.நந்தகோபால் தன் உரையில் அயோடின் சத்து மனிதர்களின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் (உடல் மற்றும் மன வளர்ச்சி), நல்வாழ்வையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அயோடின் சத்து குறைபாட்டால், மூளை வளர்ச்சி குறைபாடு, மாலைக்கண் நோய், முன் கழுத்துக் கழலை (தைராய்டு), பெண்களின் கர்ப்ப கால குறைபாடு , வளர்சிதை மாற்ற கோளாறு, மாணவர்கள் நினைவாற்றல் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட ஏதுவாகிறது. அதை தவிர்க்கும் பொருட்டு உப்புகளில் அயோடின் செறிவூட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
உணவு வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள், மளிகை கடை வியாபாரிகள், தங்கள் விற்பனை செய்யும் உப்பு நுகர்வோர்க்கு அதாவது உணவுக்கு பயன்படுத்த வாங்கப்படும் உப்பு அயோடின் கலந்த உப்பை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். உப்பில் அயோடின் உள்ளதா என கவனித்து விற்பனை செய்யவும் அதில் சிரிக்கும் சூரியன் லோகோ உள்ளதா எனவும் பார்வையிட்டு வாங்குவதுடன், தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு லோகோவுடன் கூடிய உரிம எண் உள்ளதா என கண்காணித்து விற்பனை செய்ய விழிப்புணர்வு செய்யப்பட்டது.
ஒரு சில உப்பு பாக்கெட்டுகளில் பிரஷர்வேட்டிவ் உபயோகம் என கவரின் கீழ் பகுதியில் தெரியா வண்ணம் பிரிண்ட் செய்து பதப்படுத்துவதற்கு விற்பனை செய்கின்றனர். இனி இது போன்ற உணவுக்கல்லாத உப்பு பிரசர்வேடிவ் அதாவது தோல், ஐஸ், மற்றும் இதர பொருட்களை பதப்படுத்துவதற்கு பதப்படுத்த என அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படும் உப்பு பாக்கெட்டுகள் இரண்டு கிலோ அளவிற்கு கீழ் இல்லா வகையில் தருவித்து வாங்கி விற்பனை செய்ய வலியுறுத்தப்பட்டது. விரைவில் இது சார்ந்து தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாநில ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் முன்னெச்சரிக்கை செய்தார், பொதுமக்களும் நுகர்வோரும் இதனை கவனித்து இந்த உப்பு பாக்கெட்டுகளை உணவு உபயோகத்திற்கு தவிர்க்க வேண்டும்.
நிகழ்வில் அயோடின் உள்ள உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு அறியும் வகையில் பலவிதமான உப்பு பாக்கெட்டுகள் கொண்டு நேரடி செயல் விளக்கம் அளித்ததுடன் உணவில் அயோடின் கலந்த உப்பினை மட்டும் பயன்படுத்துவோம். அயோடின் பற்றாக்குறைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் அனைவரும் துணை நிற்போம் என பங்கேற்ற அனைவரும் உறுதி மொழி ஏற்று கொண்டனர்.
நிகழ்ச்சியில் வணிகர் சங்கப் பிரதிநிதிகள், மளிகை, உணவக, பேக்கரி, கார இனிப்பு விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள்,சிறு வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக