தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, மாரண்டஅள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே பெட்டிகடையில் மறைத்து வைத்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது, அவரை கைது செய்து விசாரித்ததில் மாரண்டஅள்ளி வேதகார தெருவை சேர்ந்த திருமுருகன் (வயது .45 என்பதும், அதே போன்று மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் பெட்டி கடையில் குட்கா விற்பனை செய்த வேதகார தெருவை சேர்ந்த இளங்கோவன் (வயது .43) என்பதும் தெரிய வந்தது இருவரையும் கைது செய்த மாரண்டஅள்ளி போலீசார் அவர்களிடமிருந்து தலா 500 ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக