காரிமங்கலத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்ட மகளிர்க்கான உணவு பாதுகாப்பு மேலாண்மை பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 அக்டோபர், 2023

காரிமங்கலத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்ட மகளிர்க்கான உணவு பாதுகாப்பு மேலாண்மை பயிற்சி.


தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி, ஐ.ஏ.எஸ்., அவர்கள் ஆலோசணை படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சார்ந்து உணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு சுய உதவி குழு சமையலருக்கான, உணவு பாதுகாப்பு மேலாண்மை  மேற்பார்வையாளர்  அடிப்படை தகுதி பயிற்சி (FOSTAC BASIC LEVEL TRAINING)  ஒன்றியம் வாரியாக நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக காரிமங்கலம் வட்டார இயக்க மேலாண்மை அலகு  மையத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட இயக்க மேலாண்மை  திட்ட இயக்குநர்  (மகளிர் திட்டம்) ஒருங்கிணைப்போடு தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை  நியமன அலுவலர் மருத்துவர் திருமதி.ஏ. பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் ஏற்பாடு மற்றும்  மேற்பார்வையில், வட்டார  வள மைய இயக்க மேலாளர் அனுசுயா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முருகம்மாள், சிவகாமி முன்னிலையில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால்  தலைமையில், காரிமங்கலம் ஒன்றிய  துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு தயாரித்து அளிக்கும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களில் 146  பள்ளிகளில் இருந்து தலா ஒருவர் வீதம் 146 மகளிர்களுக்கு காலை, மாலை என இரண்டு பிரிவுகளாக உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி, உணவு பாதுகாப்பு  ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால்  தன் உரையில் முதலைமைச்சரின் காலை உணவு திட்டம் உணவு தயாரிக்கும் கூடத்தில் தினந்தோறும் மாதிரி உணவு எடுத்து வைக்கவும், உணவு பொருள் பாக்கெட்டுகளில்  காண வேண்டிய அம்சங்கள் குறித்தும், உணவுப் பொருள்களில் சிலவற்றில் வீட்டளவில் கலப்படம் கண்டறிதல் குறித்து உணவுப் பொருட்கள்  கொண்டு நேரடி செயல் விளக்கமுடன், காலாவதி தன்மை கவனித்து உபயோகிக்கவும், பயிற்சியில்  தெரிவித்த நடைமுறைகள்  வழிமுறைகள்  முறையாக பின்பற்றபடுதலுடன் பதிவேடுகளும் பராமரிக்கபடவேண்டுமெனவும் அறிவுறுத்தினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad