தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் கடத்தூர் வட்டார அளவிலான என் மண் எனது தேசம் திட்டத்தின் அடிப்படையில் மண் கலசம் தேசத்திற்கு வழங்கும் நிகழ்வு ரேகடள்ளியில் உள்ள மீனாட்சி பாலிடெக்னிக் கல்லூரியில் அதன் இயக்குனர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய குழு தலைவர் உதயா மோகனசுந்தரம் ,ரேகடள்ளி ஊராட்சி தலைவர் மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, முன்னாள் இராணுவ வீரர் முத்து, அஞ்சல் துறை கோட்ட ஆய்வாளர் சார்பில் தீபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சியில் 400க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார்.
உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, பேரணி உள்ளிட்டவை இடம்பெற்றது.நேரு யுவ கேந்திராவுடன் இணைந்த சில்லாரள்ளி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் குழளரசன் , நேரு கேந்திரா அலுவலக பல்நோக்கு பணியாளர் முனியப்பன் ஆகியோர் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக