தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கனவன அள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்டி கடையில் மதுபானங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது, அவரை பிடித்து விசாரித்ததில் நடுபையன் (வயது. 60 ) என்பதும் அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது,
அவரை கைது செய்த மாரண்டஅள்ளி போலீசார் அவரிடமிருந்த 4ஆயிரத்து 550 ரூபாய் மதிப்புள்ள 180 மில்லி அளவுள்ள 35 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக