முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நபர்கள் கவனத்திற்கு.. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 அக்டோபர், 2023

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நபர்கள் கவனத்திற்கு..

தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் (ம) விதவைகள் (ம) தாய் தந்தை இருவரும் இறந்துவிட்டு ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் படைவீரர்களின் மகள்கள் (ம) மகன்கள், துணையை இழந்த முன்னாள் படைவீரர்கள், தாய் தந்தை இருவரும் இறந்து எந்த சலுகையும் துய்க்காத முன்னாள் படைவீரர்களின் மகன்கள்/மகள்கள், இராணுவத்தில் குறைந்த காலமே பணிபுரிந்து ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்கள் (ம) 80 வயதிற்கு மேல் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவைகள் உயிருடன் இருந்தாலும் / இல்லாவிட்டாலும் அவர்களின் குடும்ப நபர்கள் தற்போது தங்களின் குடும்ப விவரங்களை மின்ஆளுமைத் திட்டத்தின்படி (e-Governance) இணையதளத்தில் குடும்ப விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று 5 ஆண்டுகளாக பல்வேறு வகைகளில் விளம்பரப்படுத்தியும், தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த மேற்குறிப்பிட்ட நபர்கள் இதுவரை அவர்களின் பதிவினை பதிவு செய்வதற்கு முன்வரவில்லை.

மத்திய மற்றும் மாநில அரசால் அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இச்சலுகையினை துய்ப்பதற்கு ஏதுவாகவும், Sparsh (System for Pension Administration (RAKSHA) திட்டத்தின் மூலம் PCDA (Pension) Allahabad அலுவலகத்தின் மூலம்தான் இனிவருங்காலங்களில் ஓய்வூதியம் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிற்கும் அனுப்பப்படும் என்பதால் மின்ஆளுமை திட்டத்தின் கீழ் (e-Governance) பதிவு செய்தால்தான் Sparsh -இன் மூலமாக ஓய்வூதியம் பெறப்பட முடியும்.


எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த மேற்குறிப்பிட்டுள்ள நபர்கள் அனைவரும் Discharge Book, Identity Card, PPO, Bank Pass Book, Aadhar Card, Family Details போன்ற ஆவணங்களுடன் தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad