தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெருவில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் தொடர்ந்து ஒன்பது நாட்கள் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து, பல்வேறு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
உலக நன்மை வேண்டி, விவசாயம் செழிக்கவும், நோய், நொடியின்றி வாழவும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து இறுதி நாளான நேற்று முக்கிய வீதி வழியாக பம்பை, நாதஸ்வரம். தாரை தப்பட்டை மற்றும் மங்கள இசை முழங்க தீ பந்த ஏந்தி மின்விளக்கு ஒளியுடன் அம்மன் வீதி உலா நடைப்பெற்றது.
இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு கற்பூரம், பூ, பழம், உள்ளிட்ட பூஜை பொருட்களுடன் தீபாராதனை காட்டி வழிபட்டனர். பக்தர்கள் அணைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் தக்காளி கணேசன், மற்றும் பாலகிருஷ்ணன் தண்டாயுதபாணி, அர்ஜூனன், கிருஷ்ணன், வெங்கடேசன், விமல்ராஜ், கேசவராஜ், விஜியகுமார், பச்சியப்பன் உள்ளிட்ட ஏராளமான ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் திரளாக பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக