தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு இன்று இரவு சுமார் 7 மணி அளவில் 2 வாலிபர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளனர்.அதில் ஒருவரிடம் இருந்த செல்போனை மற்றொரு வாலிபர் பிடுங்கி கீழே போட்டு உடைத்து விட்டதாக கூறப்படுகின்றது, இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் பின்பு இருவரும் சாலை நடுவே அமர்ந்து கொண்டும், படுத்து கொண்டும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர்.
தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து இருவரையும் அழைத்து செல்ல முற்பட்டுள்ளனர். ஆனால் கஞ்சா போதையில் இருந்தவர்கள் போலீசாரை ஆபாச வார்த்தைகளால் அசிங்கமாக பேச தொடங்கினர்.
இதனால் சற்று நேரம் செய்வதறியாது திகைத்த போலீசார் பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கஞ்சா போதையில்-காவலரிடமே வம்பு இழுத்த போதை ஆசாமிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக