பாலக்கோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 அக்டோபர், 2023

பாலக்கோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பாலக்கோடு உதவி கோட்டப் பொறியாளர் கவிதா தலைமையில் நடைப்பெற்றது.


பாலக்கோடு நெடுஞ்சாலை உட்கோட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது, கடைத்தெரு, பஸ் நிலையம், தாசில்தார் அலுவலகம், தக்காளிமண்டி வரை ஊர்வலமாக சென்று தலைகவசம் உயிர் கவசம், தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பை தடுப்பீர், சாலையில் அலைபேசி ஆபத்தாகும் நீ யோசி, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர், மிதவேகம், மிக நன்று உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இதில் உதவி பொறியாளர் நவீன்குமார், சாலை ஆய்வாளர்கள் சிவசுப்ரமணி, அந்தோனி மற்றும் 50 க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad