அந்த வரிசையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 6 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அனைத்து கிராமங்கள், நகரம், பேரூர் பகுதிகளில் கட்சியின் புதிய கிளை உருவாக்குதல், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் 450க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைப்பெற்றது. வரும் நாட்களில் வாகன பேரணியும், கிளை கூட்டமும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசுகையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் எனவும் அதற்கு நிர்வாகிகள் உழைக்க வேண்டும் எனவும் கூறினார். இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில், பாமக மாநில துணைத் தலைவர் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, பாட்டாளி இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி,பாமக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி,மாநில பொதுக்குழு உறுப்பினர் சுதாகிருஷ்ணன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இமா.பாலகிருஷ்ணன் பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார் மற்றும் மாவட்ட பொருளாளர் சரவணகுமாரி மற்றும் வன்னியர் சங்கம், பாட்டாளி இளைஞர் சங்கம், மகளிர் சங்கம், மாணவர் சங்கம், பா.ம.க அமைப்பு, இளம்பெண்கள் சங்கம், தேர்தல் பணிக்குழு, கொள்கை விளக்க அணி, சமூக ஊடகப் பேரவை, பசுமைத் தாயகம், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, தமிழ்நாடு உழவர் பேரியக்கம், பாட்டாளி தொழிற் சங்கம், வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
- செய்தியாளர் பிரேம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக