தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாரத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது இந்நிலையில் திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு (2023 2024) பருவத்திற்கான நெல் சம்பா பருவம் (ஆகஸ்ட் 2023 முதல் நவம்பர் 15.11. 2023 வரை விதைப்பு மற்றும் பருத்தி ஆகஸ்ட் 2023 முதல் அக்டோபர் (31. 10 .2023) வரை நடவு பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்யலாம் உருவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்ட்ட பயிர்களை சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகள் இப்படிப்பட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதியானவர்கள் வயர் கடன் பெரும் விவசாயிகளும் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.
மற்ற விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் சேரலாம் விதைப்பு தவித்தல் விதைப்பு தோல்வியுற்றுதல் பயிரிட அபாயம் ஏற்படும் சூழ்நிலையில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் பயிரிழப்பு அறுவடைக்கு பின் ஏற்படும் மகசூல் இழப்பு புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிரிழப்பு ஆகியவற்றிற்கு காப்பீடு பிரீமியம் தொகை 1 ஏக்கருக்கு 550.50 பயிர் நெல் பயிர் காப்பீடு 36700 பருத்தி ஒரு ஏக்கர் பயிர் காப்பீடு ரூபாய் 31005 பிரீமியம் தொகை 628.04 எனவே நெல் சம்பா பரவும் மற்றும் பருத்தி பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் அனைவரும் சேர்ந்து பயனடையுமாறு பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக