இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம் சென்னை - 05 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம், என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக