இதில் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் எட்வின் ஜீவராஜ் இணைப பேராசிரியர் ஆங்கில துறை,கிரைஸ்ட் பல்கலைக்கழகம் பெங்களூரு மற்றும் முனைவர் வி.அன்பரசி முதல்வர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாப்பிரெட்டிப்பட்டி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் மாநாட்டின் வரவேற்புரையை ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் தேன்மொழி அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் ராஜேந்திரன் துறைத்தலைவர் கூட்டுறவுத்துறை முனைவர் விஜய தாமோதரன் துறைத்தலைவர் தாவரவியல் துறை முனைவர் சங்கர் துறைத்தலைவர் தமிழ்த்துறை பேராசிரியர் சாரதி நிதியாளர் பொறுப்பு அரசு கலைக்கல்லூரி தர்மபுரி மற்றும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் சத்யா உதவி பேராசிரியர் அரசு கலைக் கல்லூரி தருமபுரி ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் கே குமார் ஆங்கிலத்துறை தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரூர், முனைவர் ஏ.அப்துல்லா சா ,ஆங்கிலத்துறை இஸ்லாமிய கல்லூரி வாணியம்பாடி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் மாநாட்டின் முதல் அமர்வில் "மொழி மற்றும் இலக்கியத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் முனைவர் எட்வின் ஜீவராஜ் அவர்களும் இரண்டாவது அமர்வில் "கலாச்சாரத்தில் டிஜிட்டல்" என்ற தலைப்பில் முனைவர் அன்பரசி அவர்களும் சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் பல்வேறு கல்லூரிகள் பல்கலைக்கழகத்தை இருந்து ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் நிறைவு விழாவில் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இந்நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமை தாங்கின இதில் கல்லூரி துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டிற்கான ஏற்பாட்டினை ஆங்கிலத்துறை கெளரவ விரிவுரையாளர்களும் மாணவர்களும் ஏற்பாடு செய்தனர் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாநாடு மிகவும் பயனுள்ளதாக கருத்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக