தர்மபுரி மாவட்டம் மேல் தெருவில் உள்ள நந்தாஸ் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் சக்தி கேந்திரா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சங்கீதா அவர்களின் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பபதால் அதற்கு முன்பாக ஒன்றிய கிளை கழகங்களில் சக்தி கேந்திரா அணியின் நிர்வாகிகளை நியமித்து பட்டியல் சமர்பிக்க கேட்டு கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கிளை கழக செயலளார்கள், சார்பு அணி நிர்வாகிகள், சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக