அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி மருத்துவர் உள்ளிட்டோரிடம் பிரசவித்த தாய்மார்கள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விரிவாக அறிக்கை அளிக்க வேண்டுமென்றும், இனிவரும் காலங்களில் பிரசவித்த தாய்மார்கள் உயிரிழப்பு ஏற்படாத வகையில் சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டுமென்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவர்களை அலைக்கழிப்பதாகவும், கிராமத்திலிருந்து வருபவர்களை மீண்டும் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அனுப்புவதும், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருப்பவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவதற்கான செயல்பாடுகள் உள்ளது குறித்து மருத்துவரிடம் தெரிவித்து, பொதுமக்களை ஏன் அலைக்கழிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்களுக்கு நிறைவான சிகிச்சை வழங்க வேண்டுமென மருத்துவா்களிடம் வலியுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக