பாலக்கோடு பேரூராட்சியில் சுத்திகரிக்கப்படாத ஆற்று நீர் கலந்து ஓகேனக்கல் குடிநீருடன் வினியோகம்- பொதுமக்கள் கடும் பாதிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 அக்டோபர், 2023

பாலக்கோடு பேரூராட்சியில் சுத்திகரிக்கப்படாத ஆற்று நீர் கலந்து ஓகேனக்கல் குடிநீருடன் வினியோகம்- பொதுமக்கள் கடும் பாதிப்பு.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18வார்டுகளில் சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றிக்கு 6லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது சமீப காலமாக ஒகேனக்கல் சுத்திகரிக்கப்பட்ட குடி நீருடன் பஞ்சப்பள்ளி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்படாத நீரையும் கலந்து முறைகேடாக பாலக்கோடு பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கும்  குடிநீர் சுத்தமாக இல்லாமல் மண்கலந்த நிறமாக வருவதாகவும், பிளீச்சிங் பவுடர் அதிகம் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


ஒகேனக்கல் குடிநீரில், பஞ்சப்பள்ளி நிலத்தடி நீர் கலக்கப்படுவதால் அதிகபுளோரைடு காரணமாக  பொதுமக்களுக்கு பற்கள், மற்றும் எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும்  சிறுநீரகம், மூளை, தைராய்டு, கல்லீரல் மற்றும் வயிற்றுப்போக்கு  உள்ளிட்ட பல்வேறு உடல் பாதைகள் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நிலத்தடி நீரில்  புளோரைடு அதிக அளவில் உள்ளது, இதை குடிப்பதால் பற்கள் எலும்புகளில் ஆஸ்டியோபோராசிஸ் நோய் தாக்கம் ஏற்பபட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி பாதிக்கபடுவதுடன் எலும்புகள் விரைவில் பலவீனமடைய காரணமாவதால், இதனை தடுக்க பல கோடி ரூபாய் செலவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தபட்டு வரும் நிலையில், பாலக்கோடு பேரூராட்சியில் முறைகேடாக ஓகேனக்கல் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீருடன் பஞ்சபள்ளி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் சுத்திகரிக்கப்படாத  தண்ணீரை கலந்து விநியோகம் செய்து வருகின்றனர்.


இதனால் சமீப காலமாக இப்பகுதி மக்கள் பல்வேறு உடல் நல கோளாறுகளுக்கும், நோய் தொற்றிற்க்கும் ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad