அரசு பள்ளியில் படிக்கும் மலை கிராம மாணவிகளுக்கு சுரபி அறக்கட்டளை மூலமாக தீபாவளிக்கு புத்தாடை வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

அரசு பள்ளியில் படிக்கும் மலை கிராம மாணவிகளுக்கு சுரபி அறக்கட்டளை மூலமாக தீபாவளிக்கு புத்தாடை வழங்கப்பட்டது.


தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மலை கிராம  மாணவிகளுக்கு, சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சுரபி அறக்கட்டளை மூலமாக 30 மாணவிகளுக்கு தீபாவளிக்கு புத்தாடை வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வில் மாணவிகள் மற்றும் பெற்றோர்களை திரு. முனிராஜ் வழக்கறிஞர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார், நிகழ்ச்சியில்  சீட்ஸ் நிறுவனத்தின்  இயக்குனர் அ. சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார்.

கே.ஜி.வி. உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமை ஆசிரியை  மஞ்சுளா தேவி, ரத்தினா ஆசிரியை மற்றும் மகாத்மாகாந்தி மாலைநேர பயிற்சி ஆசிரியைகள்  உமா, கவிப்ரியா,  கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை   வெ. பிரகாஷ் நிறுவனத் தலைவர் வீ. பார். யூ டிரஸ்ட், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad