தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. கடந்த 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 நாள் இதேநாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் பத்து மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 10, ஆயிரம் அடி உயரத்தில் அன்று வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி, காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில், இந்த ஆண்டு தருமபுரி மாவட்ட காவல் துறையில் பணியாற்றி, பணியின்போது உயிரிழந்த 189 காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் வீர வணக்க நினைவு தூணுக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து காவல் துறையின் சோக கீதங்களுடன் 63 குண்டுகள் முழங்க காவல் துறையினர் வீரவணக்கம் செலுத்தினர்.
இந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக