பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரியூர் கிராமத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவரை பாப்பாரப்பட்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள் வயது 62. தனது மனைவி தனத்தை (வயது 55) ஆசைக்கு இணங்க மறுத்ததால் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில். அவரது வீட்டில் கத்தியால் குத்தியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தார்.
மனைவியை கொலை செய்த பெருமாள் தனக்குத்தானே கையை அறுத்துக் கொண்டு யாரோ தாக்கி விட்டதாக நாடகமாடினார். காயமடைந்த பெருமாள் கடந்த மூன்று நாட்களாக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்த பெருமாளை நேற்று இரவு பாப்பாரப்பட்டி போலீசார் கைது செய்து பென்னாகரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- செய்தியாளர் இன்பசேகர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக