தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அளவிலான என் மண் எனது தேசம் திட்டத்தின் அடிப்படையில் மண் கலசம் தேசத்திற்கு வழங்கும் விழா மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாளாளர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி செங்கண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் குணசேகரன், பொருளாளர் சாமிக்கண்ணு இயக்குநர் வரதராஜன், விப்ரோ தொண்டு நிறுவன இயக்குநர் வெங்கடேசன், முன்னாள் இராணுவ வீரர்கள் கிருஷ்ணன் குட்டி, ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் சகிலா, அஞ்சல் துறை கோட்ட ஆய்வாளர் சீனிவாசன், போளையம்பள்ளி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் மணி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் சார்பில் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். உறுதி மொழி ஏற்பு, விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, பேரணி உள்ளிட்டவை இடம்பெற்றது. 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக