தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற அலுவலகத்தில் விஜயதசமியை முன்னிட்டு இன்று பாலக்கோடு சட்டமன்ற உறுப்பிணர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்கள் லட்சுமி, சரஸ்வதி, சுவாமி படங்ககளுக்கு பூவினால் அலங்காரம் செய்து, கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டு ஆயுத பூஜை செய்து வழிபட்டார். அதனை தொடர்ந்து அனைவருக்கும் பொறி மற்றும் இனிப்புக்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக