தருமபுரி வடகிழக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய பொதுக்குழு கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 அக்டோபர், 2023

தருமபுரி வடகிழக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய பொதுக்குழு கூட்டம்.


தருமபுரி மாவட்டம்,  காரிமங்கலம் வடகிழக்கு ஒன்றிய  பாட்டாளி மக்கள் கட்சியின்  ஒன்றிய பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் மு.சஞ்சீவன் தலைமையில் காரிமங்கலம் ராமாயி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ம.கோவிந்தசாமி, சின்னசாமி, பசுமைத் தாயக பொறுப்பாளர் பிரஸ்ராஜா, ஒன்றிய துணை தலைவர் முருகன், ஒன்றிய துணை செயலாளர் மாதேஷ், ஒன்றிய மாணவரணி தலைவர் நந்தகுமார், பசுமைத் தாயக பொறுப்பாளர் சுப்ரமணி, ஆகியோர் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய தலைவர் பெரியண்ணன் அனைவரையும் வரவேற்றார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கூட்டத்தில் சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் மு.செல்வகுமார், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆ.அன்பழகன், மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் கா.கா.சித்துராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரிதாபாணு, ஒன்றிய செயலாளர் பழனி, பேரூர் செயலாளர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் மோகன் உள்ளிட்ட ஒன்றியத்தின் அணி, துணை, கிளை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தின் இறுதியில் ஒன்றிய மகளிர் சங்க தலைவர் விஜியாசங்கர் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முறையே 

  1. ஒன்றியத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் கிளை கூட்டம், திண்ணைப் பரப்புரை மேற்கொள்ளுவது, 
  2. காரிமங்கலம் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வசதி ஏற்படுத்துதல், 
  3. தும்பலஅள்ளி அணைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் 
  4. எண்ணேகோல்புதூர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்றுதல்,
  5. கே.ஆர்.பி அணையின் வலதுப்புற கால்வாய் வழியாக வரும் உபரிநீரை கும்பாரஅள்ளி, கொல்லுப்பட்டி உள்ளிட்ட சுமார் 35 ஏரிகளுக்கு நிரந்தரமாக வழங்குதல், 
  6. கே.ஆர்.பி அணையின் உபரிநீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளுக்கும் நிரப்பும் வகையில் புதிய கால்வாய்களை அமைத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad