தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூரில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் குழந்தைவேல் தலைமை வகித்தார்,மாவட்ட துணை செயலாளர் முனுசாமி,சண்முகம்,முத்தம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்,மாவட்ட குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர்கள் சங்க கொடியினை சுஞ்சல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் தொட்டி ஏற்றி வைத்தார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர்கள் சங்க ஏரியூர் ஆலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தர்மபுரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.கலைசெல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் எம் ஏ.காதர், விடுதலை விரும்பி,தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர்கள் சங்க மாநில குழு உறுப்பினர் சுதர்சனன்,மாவட்டத் துணைத் தலைவர் ஏ.முருகேசன், ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மனோகரன்,ஏஐடியூசி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எம்.சிவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஏஐடியூசி மாநில துணைத்தலைவர் கே.மணி, கட்டிட தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஏ சி மணி ஆகியோர் நிறைவுறையாற்றினார்கள். நிறைவாக கட்டிட தொழிலாளர்கள் சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக