மாநில அளவிலான கூடோ‌ போட்டியில் தங்கம் வென்ற தர்மபுரி வீரர்களை வாழ்த்திய தடங்கம் சுப்ரமணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 அக்டோபர், 2023

மாநில அளவிலான கூடோ‌ போட்டியில் தங்கம் வென்ற தர்மபுரி வீரர்களை வாழ்த்திய தடங்கம் சுப்ரமணி.


கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடோ போட்டியில் தர்மபுரியை சேர்ந்த 7 வீரர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.

திருச்சி சுப்ரமணியபுரத்தில்  கடந்த 14 ஆம் தேதி, 5-வது மாநில அளவிலான கூடோ‌ போட்டிகள் தமிழக கூடோ சங்க தலைவரும் பயிற்சியாளருமான கந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டிகளை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு தொடங்கி வைத்து பார்வையிட்டு வீரர் வீராங்கனைகளை வாழ்த்தினார்.


மேலும் இந்த போட்டிகளில் திருச்சி, ஈரோடு, தஞ்சை, சென்னை, கன்னியாகுமாரி, திருவண்ணாமலை, சேலம், மதுரை, நாகை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 350க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் வெற்றி பெற்றவர்கள் நவம்பர் மாதம் 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற உள்ள 14 ஆவது தேசிய அளவிலான போட்டிகளிலும், அதனைத் தொடர்ந்து 15-வது தேசிய அளவிலான அட்சயகுமார் தேசிய அளவிலான கோப்பைக்கான போட்டிகளிலும், தொடர்ந்து 4-வது ஃபெடரேஷன் கப் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர்.


பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் தர்மபுரியைச் சேர்ந்த 7 வீரர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற 7 வீரர்களில் 5 பேர் தங்கம் மற்றும் 2 பேர் வெள்ளி பதக்கங்களை  வென்றுள்ளனர். 


7 வயதிற்கு உட்பட்டோர் 21 கிலோ பிரிவில் நிஷ்வந்த்  தங்க பதக்கமும், 11 வயதிற்கு உட்பட்டோர் 30 கிலோ பிரிவில் தினேஷ் மற்றும் 15 வயதிற்குட்பட்டோர் 46 கிலோ பிரிவில் வினீத்குமார் வெள்ளி பதக்கமும், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மணிகண்டன், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் விக்னேஷ், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கெளதம், 30 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சக்திவேல் ஆகியோர் தங்க பதக்கம் வென்றுள்ளனர். 


இவர்களில் தங்கப்பதக்கம் வென்ற 5 பேரும் அடுத்த மாதம் குஜராத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற அனைவரையும் திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


-க.மோகன்தாஸ், தர்மபுரி. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad