பென்னாகரம் அடுத்த மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ் பெங்களூரில் தனியார் நிறுவன ஊழியராக பணயாற்றி வந்தார்.. இவர் தனது அத்தை மகளான சத்யா(23) என்பவரை காதலித்து வந்ததாகவும், சத்யாவிற்க்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்ததாக கூறப்பட்டது.
தருமபுரி அடுத்த கடகத்தூரில் உள்ள அக்கா வீட்டிற்க்கு சத்யா வந்ததை அறிந்த சாம்ராஜ் தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வருமாறு 8.4.2013 அன்று அழைத்துள்ளார், பேருந்து நிலையத்தில் மேட்டூர் செல்லும் பேருந்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்ததில் சத்யா சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது, குற்றம் உறுதியான நிலையில், சாம்ராஜுக்கு ஆயுள் தண்டனையும் ரூ 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக