பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா இராமகிருஷ்ண், தித்தியோப்பனள்ளி வார்டு கவுன்சிலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்குமரன், கல்பனா, ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் சத்தியராஜ், சரவணன், அஞ்சல் கோட்ட ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்கள் அரிபிரசாந்த், ஞானராஜ், பல்நோக்கு பணியாளர் முனியப்பன், அரங்காபுரம் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் முருகன், இராகுல் செய்திருந்தது குறிப்பிடதக்கது ஆகும். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார்.
500க்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, பேரணி உள்ளிட்டவை இடம்பெற்றது. நிறைவாக உதவி பேராசிரியர் முனைவர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக