கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வரும் பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 அக்டோபர், 2023

கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வரும் பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.


தருமபுரி மாவட்ட கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டடம் மற்றும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையக்கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டடம், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையக்கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் 26.10.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி காட்சியின் வாயிலாக 20.01.2022 அன்று ஆற்றிய உரையில் தருமபுரியில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டடம் கட்ட ரூ.36.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.


இக்கட்டடம் கட்ட சுமார் 4.25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தரைதளத்துடன் கூடிய ஐந்து தளம் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்தின் பரப்பளவு 1.21 இலட்சம் சதுர அடி ஆகும். தரைதளத்துடன் கூடிய ஐந்து தளத்தில் மாவட்ட ஆட்சியர் அரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பயிற்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட நகர் ஊரகமைப்பு அலுவலர், தமிழ் வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர், மாவட்ட சமுக நல அலுவலர், இந்து சமய அறநிலைய அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அறை மற்றும் மற்ற பிற துறைக்களுக்கும் அறைகள் ஒதுக்கப்பட உள்ளது.


இப்புதிய கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் வசதி, மின்தூக்கி வசதி மற்றும் நீரின் அவசியம் கருதி மழைநீர் சேமிப்பு வசதியும் ஏற்ப்படுத்தப்பட உள்ளது. தற்போது முதல் தளம் கூரை பணிகள் முடிக்கப்பட்டு இரண்டாம் தளத்தின் கான்கிரீட் தூண்கள் போடப்பட்டு இரண்டாம் தளத்தினுடைய கூரை சென்ட்ரிங் பணிகள் மற்றும் கம்பி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. 


இப்பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்கள்.


மேலும், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையக் கட்டடம் கட்ட ரூ. 20.00 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது. இக்கட்டடமானது தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் மொத்த பரப்பளவு 46,502 சதுர அடியில் கட்டப்பட உள்ளது.


இக்கட்டடத்தில் அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வகம், MRI ஸ்கேன், அறுவை சிகிச்சை அரங்கம்-2, மயக்கவியல் நிபுணர் அறை, நோயாளிகளை தயார் செய்யும் அறை, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு. தீவிர சிகிச்சை பிரிவு (ICU) PACU பிரிவு நியோரோ அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு (HDU) தனிமைப்படுத்தப்பட்ட பெண் நோயாளிகள் பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, மற்றும் அதற்கான தேவைகள், மருந்துகள் சேகரிப்பு அறை, தனிமைப்படுத்தப்பட்ட ஆண் நோயாளிகள் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட அறைகள், பணி மருத்துவர். செவிலியர் அறைகள், பொது நோயாளிகள் பிரிவு (ஆண்கள், பெண்கள்), Pay வார்டுகள் மற்றும் கழிப்பறைகள் ஆகிய வசதிகள் அமைந்துள்ளது.


இத்தீவிர சிகிச்சை மையக் கட்டடத்தில் தண்ணீர் வசதி, படுக்கை மின்தூக்கி, தீத்தடுப்பு அம்சங்கள் (Fire Protectian). மருத்துவ வாயுக் குழாய்கள் (Medical Gas Pipe line) ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. தற்போது பணிகள் துவக்கப்பட்டு First Floor Columm உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்கள்.


இந்நிகழ்வுகளின் போது பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் கோயம்புத்தூர் மண்டலம் திரு ச.காசிலிங்கம், கண்காணிப்பு பொறியாளர் திரு.பெ.சண்முகம், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. அமுதவல்லி, செயற்பொறியாளர் திரு. அ.சிவக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad