பாப்பாரப்பட்டி அருகே உள்ள தட்டாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் என்பவரது மகன் விஜயகுமார்(40). வாகன புரோக்கர். இவரது மனைவி அனு. தட்டாரப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த கண்டு என்பவரின் மகன் லோகநாதன்.வயது 45. விவசாயி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுவின் தந்தை கண்ணு என்பவர் தனது மகள் அனு மற்றும் மகன் லோகநாதன் ஆகியோருக்கு தனது நிலத்தைப் பகிர்ந்து கொடுத்துவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில் கடந்த 13- ஆம் தேதி இரவு அனுவின் வீட்டுக்கு வந்த அண்ணன் லோகநாதன் அனுவிடம் நிலம் தொடர்பாக தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தட்டிக்கேட்ட அனுவின் கணவரான பாஸ்கரனை லோகநாதன் கல்லால் தலையில் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தாராம். இதில் படுகாயமடைந்த பாஸ்கரன் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலத்தகராறில் தங்கை மற்றும் மைத்துனரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பாப்பாரப்பட்டி போலீசார் லோகநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக