இம்முகாமில் கண், காது, நரம்பியல், மனநலம், ஆர்த்தோ மருத்துவர்கள் பங்கேற்று குழந்தைகளை பரிசோதித்தனர், இம் முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இம் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த 80 குழந்தைகளுக்கு தேனீர், சிற்றுண்டி, மதிய உணவு ஆகியன வழங்கப்பட்டது.
இதில், 0 முதல் 18 வயது உடையோர் கலந்து கொண்டனர். இம்முகாமை தர்மபுரி வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) திருமதி. கவிதா தலைமையேற்று நடத்தினார். நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. கமலேசன், நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. வரலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் திரு. சிவக்குமார் அவர்கள் செய்தார்.
இதில், தர்மபுரி, பென்னாகரம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டு பயனளித்தனர். மொத்த நிகழ்வினையும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. மோகனப்பிரியா ஒருங்கிணைத்தார். இறுதியாக, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அவர்களால் கையொப்பமிடப்ப ட்ட அடையாள அட்டை பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டு முகாம் நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக