தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களுக்கு ஆயுத பூஜை போடப்பட்டது, தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கிறது அதை கட்டுப்படுத்தும் விதமாக வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது இந்த வருட ஆயுத பூஜைக்கு மக்கள் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நிலையில் அவர்கள் குணமாகும் விதமாக கொசு மருந்து இயந்திரங்களுக்கு பூஜை செய்து இனிமேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படக்கூடாது என்று கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் கடவுளிடம் வேண்டிக் கொண்டுள்ளனர்.
- மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்
- கொசு வலை போர்த்தி படுக்க வேண்டும்
- காய்ச்சல் வந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
- வீட்டைச் சுற்றி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்
- சிமெண்ட் தொட்டி, தரை தொட்டி,தேவையற்ற பொருள் டயர், டீ கப், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்
மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக.சென்று விழிப்புணர்வு செய்து வருகின்றனர், இந்த பூஜையில் மொரப்பூர் அரசு மருத்துவ அலுவலர் Dr.வனிதா, சுகாதார ஆய்வாளர் சங்கர் மற்றும் மொரப்பூர் அரசு மருத்துவ கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக