இக்கூட்டத்திற்க்கு வடமண்டல தேர்தல் மேலிட பொறுப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், நற்குமரன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கோட்டை கலைவாணன், மண்டல செயலாளர் தமிழ்அன்வர், மண்டல துணைச் செயலாளர் மின்னல் சக்தி, மாநில துணைச் செயலாளர் சிவஞானம் ,முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயந்தி, விஜயகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் பேசியதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மாவட்ட முழுவதும் உள்ள கிளை கழகம் வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பிய புதிய உறுப்பிணர்கள் பெயர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். வார்டு வாரியாக மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். வரும் 21.10.2023 அன்று சென்னையில் நடக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்பது குறித்தும் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி செந்தில்குமார், மாவட்ட தொண்டர் அணி துணை தலைவர் மகிழ்வளவன், மாவட்ட ஊடக மையம் பரமதமிழன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை லட்சுமணன், பென்னாகரம் நகர செயலாளர் மணிவளவன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஒன்றிய செயலாளர்கள் கார்த்திகேயன்,முருகேசன், நாராயணன்,செல்லன், லோகு கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக