காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 அக்டோபர், 2023

காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டார வேளாண்மை துறை சார்பில் ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் சிறுதானியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கப்பட்டது.


இதற்கென 4 பிரச்சார வாகனங்கள் மூலம் காரிமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறுதானிய குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய பயன்பாடு சிறுதானிய விவசாயம் ஆகியவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.


இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து சேர்மன் பி சி ஆர் மனோகரன் அவர்கள் காரிமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்து பொதுமக்களிடம் சிறுதானிய பயன்பாடு குறித்து துண்டு பிரசரங்களை வழங்கி விழிப்புணர் பிரச்சாரம் மேற்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் புவனேஸ்வரி, வேளாண் அலுவலர்கள் கனகராஜ், செல்வம், உதவி அலுவலர்கள் மலர்விழி, சிவஞானம், அமராவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad