தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்று நடைபெற்றது, அதன் படி பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் A. பள்ளிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் ஒரு சில வார்டு உறுப்பினர்களும், ஒரு சில அரசு அலுவலர்களும், போதிய மக்கள் இல்லாமலும் நடை பெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன், துணை தலைவர் கலைவாணி ஆகியோர் தலைமை தாங்கினார். பார்வையாளராக ராஜேந்திரன் என்பார் கலந்துகொண்டார்.
மேலும் கடந்த 15-08-23 சுதந்திரதின கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுமக்களிடம் கையெழுத்து மட்டும் வாங்கி கொண்டனர், மேலும் தீர்மானத்தை படிக்காமலும், ஊராட்சியின் வரவு செலவு எதையும் வெளிப்படுத்தாமல், வெறும் பேனரில் காண்பித்தனர். இம்முறையும் அதே போன்று யாரையும் அறிமுகம் செய்யமல் வெறுமனே விதிமுறைகளை படித்து காட்டினர், பிறகு 2018- 2023 வரை உள்ள நிதிக் குழு குறித்த விவரம் கேட்டதற்கு பேனரை காட்டினர். 100 நாள் வேலை திட்ட முறைகேடு தொடர்பாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. பூமாரிகண்ணன் அவர்களிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை, இளைஞர்களுக்கு இதுவரையில் எந்த ஒரு விளையாட்டு பொருளும் பஞ்சாயத்து சார்பாக செய்துதரவில்லை, 15வது நிதிகுழு முறைகேடு, IG பைப் லைன் அமைத்தல், இது போன்ற பல்வேறு முறைகேடு நடந்துள்ளது.
இதுவரையில் நடந்த எல்லா கூட்டத்ததிலும் ஒரே ஒரு தீர்மான புத்தகம் காண்பித்து எந்த வித வரவு செலவினம் குறித்த விவரங்கள் கான்பிக்கபடவில்லை, ஊராட்சி மன்ற உறுப்பினரின் தவறை மறைக்க இந்த கிராமசபை கூட்டத்தை இப்படி தனது போக்கில் நடத்துவதாக இக்கூட்டம் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டது என பொதுமக்கள் அறிவித்தனர். இதனை கவனத்தில் கொண்டு அ.பள்ளிபட்டி மீது தனி கவனம் செலுத்தி வார்டு உறுப்பினர்களும், அந்த அந்த அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மற்றொரு நாள் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவேண்டும் என்று அ.பள்ளிப்பட்டி மற்றும் அதன் பஞ்சாயத்து சார்ந்த கிராம பொது மக்களும் கேட்டு கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக