அதை தொடர்ந்து 18.10.2023 முதல் ஆம்னி பேருந்து சிறப்பு தணிக்கை வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன் அவர்கள் தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.அ.க.தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.கு.வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.குலோத்துங்கன் ஆகியோர் தொடர் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டதில் அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 பிறமாநில ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு தருமபுரி வட்டார போக்கவரத்து அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசுக்கு குறைவாக வரி செலுத்தி இயக்கிய 3 ஆம்னி பேருந்துகளுக்கு உடனடியாக வரி வசூலிக்கப்பட்டது.
இவ்வாகன சோதனையில் அரசுக்கு மொத்தம் ரூ.1,47,500/- (ரூபாய் ஒரு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக