சக்கில்நத்தம் மலை கிராமத்திற்க்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கிராம பொதுமக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 அக்டோபர், 2023

சக்கில்நத்தம் மலை கிராமத்திற்க்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கிராம பொதுமக்கள்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சக்கில்நத்தம் மலை கிராமத்தில் 120 குடும்ங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர், இம்மலை கிராமத்திற்க்கு இது நாள் வரை பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரவும், மருத்துவமனைக்கு செல்லவும், வேலைக்கு சென்று வரவும் வாகன வசதி இல்லாமல் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.


எனவே இக்கிராமத்திற்க்கு அரசு பேருந்து வேண்டி நீண்ட காலமாக போராடி வந்த நிலையில் கடந்த வாரம் இது குறித்து தமிழக முதல்வரின் தனிபிரிவிற்க்கு மனு அளித்திருந்தனர். இதையறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இக்கிராமத்திற்க்கு பேருந்து இயக்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இன்று 16ம் எண் அரசு நகர பேருந்து பாலக்கோட்டில் இருந்து கோட்டூர், கரகூர் வழியாக ஈச்சம்பள்ளம் சக்கில் நத்தம் கிராமத்திற்க்கு ஒதுக்கப்பட்டு போக்குவரத்து துவக்கப்பட்டது.

முதன்முதலாக கிராமத்திற்க்கு வந்த பேருந்தை ஊர் பொதுமக்கள் அலங்கரித்து பூஜை செய்து இனிப்பு வழங்கி முதல் பயனத்தை தொடங்கி வைத்தனர். கோரிக்கையை ஏற்று உடனடியாக பேருந்து வழங்கிய தமிழக முதல்வருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பேவு அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ், ஊர் கவுண்டர்கள் முருகேசன், கோவிந்தராஜ், மந்திரி கவுண்டர்கள் மாதையன், ஜெய்சங்கர், மற்றும் ராஜா, நெடுமாறன் முன்ராஜ், கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad