இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி தலைமை தாங்கினார்.தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சிறப்பு நிலைய அலுவலர் இரா.முரளி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வினோத், கேப்டன் ராஜ், இளங்கோவன், ஞானப்பிரகாசம், அசோக் உள்ளிட்டோர் செயல்விளக்கம் மூலம் செய்துகாட்டினார்கள்.
சிறப்பு நிலைய அலுவலர் கூறுகையில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இடி, மின்னல் போன்ற நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும், வருகின்ற தீபாவளி பண்டிகையின்போது விபத்தில்லா தீபாவளியாக மாணவர்கள் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது பற்றியும் விளக்கினார்.
வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர்களை பாதுகாப்பான முறையில் கையாள்வது பற்றி பெற்றோர்களுக்கு மாணவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பள்ளி மாணவர்கள் இந்த தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிப்பதில்லை என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி ராஜேஸ்வரி, ரேகா அம்பிகா உட்பட மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக