குடிபோதையில் பாலத்தில் தவறி விழுந்தவர் பலி கோபிநாதம்பட்டி போலிசார் விசாரணை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 அக்டோபர், 2023

குடிபோதையில் பாலத்தில் தவறி விழுந்தவர் பலி கோபிநாதம்பட்டி போலிசார் விசாரணை.

அரூர் அருகே உள்ள ஜம்மணஹள்ளியை  சேர்ந்தவர் ராமக்கவுண்டர் இவரது மகன்  செல்வம் (40) இவர் தனது நண்பர்களுடன் நேற்று மாலை ஜம்மனஹள்ளி ஆலமரத்துப்பட்டி பிரிவு ரோடு அருகே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.


காலை அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து கோபிநாதம்பட்டி போலிசாருக்கு தகவல் அளித்ததனர், இதன் பேரில் கோபிநாதம்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இறந்த செல்வத்திற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad