அதனடிப்படையில் தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அனைத்து கிராமங்கள், நகரம், பேரூர் பகுதிகளில் கட்சியின் புதிய கிளை உருவாக்குதல், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்த குழுக்கள் உருவாக்கப்பட்டு 450க்கும் மேற்பட்ட பகுதிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி அவர்களும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்களும் பல்வேறு இடங்களில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, கட்சியின் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் மாநில துணை தலைவர் பி.சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆ.அன்பழகன், மாவட்ட பொருளாளர் கு.சரவணகுமாரி, மாவட்ட அமைப்பு தலைவர் கே.இ.கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெ.தேவேந்திரன், வி.எம்.சேகர், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் ஈ.பி.சின்னசாமி, தருமபுரி சட்டமன்ற தொகுதியில், மாநில துணை தலைவர் பாடிசெல்வம், மாவட்ட தலைவர் மு.செல்வகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.கே.சுதாகிருஷ்ணன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மு.பாலாஜி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் து.சத்தியமூர்த்தி, சமூக நீதிப்பேரவை மாநில செயலாளர் மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர் ஏ.எஸ்.தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர் ப.கி.மந்திரி, பசுமைத் தாயக மாவட்ட செயலாளர் பாலசந்தர், இளைஞர் சங்க மாவட்ட துணை தலைவர் சந்தோஷ், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில், மாவட்ட துணை செயலாளர்கள் த.காமராஜ், ரெ.மு.மனோகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒ.கே.சுப்ரமணியம், மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் கா.கா.சித்துராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கு.சுப்ரமணியம், மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் தி.வாசுநாயுடு, முன்னாள் சிறப்பு மாவட்ட செயலாளர் கோ.சின்னசாமி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் சி.அய்யப்பன், மாவட்ட துணைத் தலைவர் பெ.நந்திசிவம், ஒன்றிய தலைவர் பூ.வெங்கடேன், பேரூர் தலைவர் செல்வம், நகர அமைப்பு செயலாளர் செ.ராஜா, கூத்தப்பாடி அருள்மொழி உள்ளிட்டவர்கள் அடங்கிய சிறப்பு குழு உருவாக்கப்பட்டு ஒன்றியத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் கொடியேற்றினர்.
இந்நிகழ்ச்சிகளில், பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், அணி, துணை, கிளை நிர்வாகிகளும், தொண்டர்களும் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக