மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் சார்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 31 அக்டோபர், 2023

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் சார்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.


பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, பென்னாகரம் அருகே நல்லானூரில் அமைந்துள்ள ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, பண்டிகைகள் நமக்கு கற்றுத் தருவது நமது பண்பாட்டையா? நாம் படும் பாட்டையா? என்ற பொருண்மையில் பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி கலையரங்கத்தில் சிறப்புப் பட்டிமன்றம் நடத்தியது.

நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார். மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன் மற்றும் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.பரஞ்சோதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் வரவேற்று பேசினார். பட்டிமன்றத்தின் நடுவராக தகடூர் வெ.சரவணன் இருந்தார். பண்பாட்டையே என்ற அணியில் த.புனிதவள்ளி, செல்வி கு.தாரணி, செல்வி   செ. ஆனந்தி உள்ளிட்டோர் பேசினர்.


படும் பாட்டையே என்ற அணியில் சிவம் முனுசாமி, சு.இரவிச்சந்திரன் ,  செல்வன் இரா.கேசவன் உள்ளிட்டோர் பேசினர். நிறைவாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ப.சண்முகம் நன்றி கூறினார். பாலிடெக்னிக் கல்லூரி கட்டிடவியல் துறையின் உதவிப் பேராசிரியர் இராஜீவ்  நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவ மாணவிகள் என 1000 பேர் நிகழ்வில் பங்கேற்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad