பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 அக்டோபர், 2023

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பாப்பாரப்பட்டி பி.கே.எஸ் திருமண மண்டபத்தில், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்வில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவருமான ஜி.கே.மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முறையே,

  1. பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் உயிர் மூச்சு கோரிக்கையான ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் உடனே நிறைவேற்றி தருமபுரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட இப்பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
  2. தருமபுரி - ஓசூர் வரை அமைக்கப்பட்டுள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் மத்திய அரசின் விதிகளுக்கு மாறாக பாலக்கோட்டில் அமைக்க உள்ள சுங்கச்சாவடியால் பாலக்கோடு பகுதி வாழ் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சுங்க சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. மாற்ற நடவடிக்கை எடுக்கவிட்டால் பாமக பொதுமக்களை திரட்டி போராட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமென இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
  3. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மாவட்டம் முழுவதும் பல கிராமங்களுக்கு முழுமையாக குடிநீர் கிடைக்கவில்லை. எனவே மாவட்டம் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
  4. பென்னாகரம் தொகுதியில், ஒட்டனூர் - கோட்டையூர் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் திட்டம் தமிழக அரசு அறிவிக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி மேம்பாலம் கட்டும் பணியை உடனே துவங்கிட வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
  5. படித்த இளைஞர்கள் வேலைத்தேடி வெளி மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் செல்லும் அவல நிலையை போக்க தருமபுரியில் உடனடியாக சிப்காட் தொடங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தருமபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியான தொப்பூர் கணவாயில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துக்களை தடுக்கவும், விபத்துக்களால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவதை தடுக்கவும், விபத்தில்லா சாலையாக மாற்ற தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad